Monday, November 24, 2008

பிரிவும் ஒரு காதல் தான் !!!...






பிரிவும்  ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...

பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...

10 comments:

Unknown said...

அன்பின் விஷ்ணு... இந்தக் கவிதை மிக அழகு....அதிலும் கடைசி வரிகள் மிக மிக அழகு...பிரிவிலும் காதலைக் காண்பது சுலபமல்ல...!

thamizhparavai said...

நண்பர் விஷ்ணுவிடமிருந்து இன்னும் வீர்யமூள்ள கவிதைகளை எதிர்பார்க்கிறேன்...

Vishnu... said...

Kanthi said...
அன்பின் விஷ்ணு... இந்தக் கவிதை மிக அழகு....அதிலும் கடைசி வரிகள் மிக மிக அழகு...பிரிவிலும் காதலைக் காண்பது சுலபமல்ல...!


முதல் பின்னூட்டமாக வந்து
வாழ்த்து சொன்ன அன்பின் காந்தி அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகள் ..

உண்மை தான்
பிரிவில் காதலை காண்பது கடினமே

அன்புடன்
விஷ்ணு

Vishnu... said...

//தமிழ்ப்பறவை said...
நண்பர் விஷ்ணுவிடமிருந்து இன்னும் வீர்யமூள்ள கவிதைகளை எதிர்பார்க்கிறேன்...//

நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ...
கண்டிப்பாக வீரியமுள்ள
கவிதைகளை கண்டிப்பாக
தர முயற்சி செய்கிறேன் ...

இந்த கவிதை ஒருவர் எழுதிய கவிதையின் கடைசி வரிகள் கொண்டு தொடங்க வேண்டும் ..
அப்படி எனது மச்சான்
அன்பின் இளங்கோ
எழுதிய கவிதையின்
கடைசி வரிகள் வைத்து வேகமாக எழுதியது அன்புடன் குழுமத்தில் ...

அன்புடன்
விஷ்ணு

ஹேமா, said...

விஷ்ணு,பிரிவின் வேதனையைக் கூட வர்ணனையோடு அழகாக எழுதியிருக்கிக்கீங்க.

Vishnu... said...

//ஹேமா, said...
விஷ்ணு,பிரிவின் வேதனையைக் கூட வர்ணனையோடு அழகாக எழுதியிருக்கிக்கீங்க. //

மிக்க நன்றிகள் ஹேமா ...

அன்புடன்
விஷ்ணு

இரா. வசந்த குமார். said...

அன்பு விஷ்ணு...

'ஓர்' என்பது தமிழில் ஐந்து எழுத்துகளில் துவங்கும் வார்த்தைகளுக்கு முன் மட்டுமே வர வேண்டும். அ, இ, உ, எ, ஒ. ஓர் அலை - சரி. ஓர் கால் - தவறு.

தெரிந்து கொள்ள முயலலாமே!!

Vishnu... said...

// இரா. வசந்த குமார். said...
அன்பு விஷ்ணு...

'ஓர்' என்பது தமிழில் ஐந்து எழுத்துகளில் துவங்கும் வார்த்தைகளுக்கு முன் மட்டுமே வர வேண்டும். அ, இ, உ, எ, ஒ. ஓர் அலை - சரி. ஓர் கால் - தவறு.

தெரிந்து கொள்ள முயலலாமே!!//

மிக்க நன்றிகள் அன்பு வசந்த குமார் அவர்களே ...
இந்த கவிதையின் முதல் வரி அன்புடன் குழுமத்தில் ஒருவர் எழுதிய கவிதையின் இறுதி வரிகளை கொண்டு எழுதவேண்டும் என்ற முறைப்படி எழுதியது ..அதனால் தான் இந்த பிழை ..பொறுத்தருள்க .. திருத்திக்கொள்கிறேன் ...

நன்றிகளுடன்
விஷ்ணு ..

காயத்ரி said...

பிரிவிலும் காதலா? ஆழமான சிந்தனை... அழகான எண்ணம்... கவிதை அருமை நண்பரே...

சசிகலா said...

பிரிவையும் ரசிக்க வைத்த வரிகள் அருமை .