Saturday, November 22, 2008

கனவுப்பறவை...






இதயத்துள்
புள்ளிகளில் தொடங்கி
வட்டமிட்டு வட்டமிட்டு
நாடி நரம்புகளை
அடக்க துடித்திருந்த
கனவுகளை ....

சிலுவையில் அறைந்து
சிறை படுத்திய திருப்தியில்
சிறகுகளை
முறித்துக்கொண்டு
திரும்ப நடக்கிறேன் ...

கடந்து வந்த சுவடுகளே
கை பிடித்திழுக்க
முளைக்க தொடங்கின ...
மீண்டும் சிறகுகள் ....

5 comments:

thamizhparavai said...

நண்பர் விஷ்ணுவுக்கு...
எத்தனை துரத்தினாலும் விடாது இந்தக் கனவுகளும் ஆசைகளும்...
கட்டுப்பாட்டு மணலில் கால்கள் புதைந்தாலும், வானிழுக்கும் வல்லமை பெற்றது இந்தச்சிறகுகள்....
நல்ல கவிதை விஷ்ணு...

Vishnu... said...

//தமிழ்ப்பறவை said...
நண்பர் விஷ்ணுவுக்கு...
எத்தனை துரத்தினாலும் விடாது இந்தக் கனவுகளும் ஆசைகளும்...
கட்டுப்பாட்டு மணலில் கால்கள் புதைந்தாலும், வானிழுக்கும் வல்லமை பெற்றது இந்தச்சிறகுகள்....
நல்ல கவிதை விஷ்ணு...//

வருகைக்கும் இப்பதிவிற்கு முதல் பின்னூட்டமும் ....நன்றிகள் நண்பரே ..

மிக அருமையாக சொல்லி விட்டீர்கள் நண்பரே ..உண்மை தான் கனவு சிறகுகள் என்றுமே நமது கட்டுக்குள் இருப்பதில்லை பாராட்டுக்கு
நன்றிகளுடன் ...

விஷ்ணு

ஹேமா, said...

விஷ்ணு,உங்கள் கவிதைகளுக்கும் சிறகு முளைக்கிறதே!

Vishnu... said...

//ஹேமா, said...
விஷ்ணு,உங்கள் கவிதைகளுக்கும் சிறகு முளைக்கிறதே!//

என்ன செய்ய ஹேமா ..எத்தனை கட்டு படுத்தினாலும் கனவுப்பறவையை கூட்டுக்குள் அடைக்க முடிவதில்லை ...

கவிதைக்கு சிறகு முளைத்தால் மகிழ்ச்சியே ..

நன்றிகளுடன்
விஷ்ணு

கவிநா... said...

சிறகு முளைத்த கனவுகள்... - நல்ல கற்பனை...
கனவுகளே பறக்கத்தான்.
அதிலும் சிறகு முளைத்த கனவுகளின் வீரியம் கவிதையில் நன்கு தெரிகிறது...

கவிதை நன்று நண்பரே... ரசித்தேன்...