Tuesday, December 18, 2007

அபலையாக...



சுகமான குயில்நாதம்
சோகமாக வரக்கண்டேன் ...
ஏகாந்த வேளை அது ...
ஏறெடுத்து பார்த்திட்டேன் ...

ஆதரவாய் செவிசாய்த்தே...
அருமை குயில் கதைகேட்டேன் ...
கானக்குயில் வார்த்தையிலே
கதைகள் எல்லாம் கண்ணீராய் !!!...

சின்ன சின்ன ஆசைக்களும் ...
சிறிதான கனவுகளும் ...
பூத்திடவே தவம் செய்த
ஜோடிக்குயில் மறைந்த கதை !!!...

அன்றொருநாள் இரை தேட
ஆண்குயிலும் போனவேளை
அடங்காத பசியோடே
ஆர்பரித்த காட்டு தீயும் ...

கண்ணிமைக்கும் நொடியினிலே
எரிந்துபோன மாயம் என்ன ..
என்னவளின் கனவுகளும்
இமைமூடா நினைவுகளும் !!!...

சொன்னதுவே சோகமாக
ஆண்குயிலும் அழுகையோடே ...

கடந்துபோன இன்பங்களும் ..
விரகத்தின் துன்பங்களும்...
துணையாகி போனதுவே
ஆண்குயிலின் இரவுகளில் ....

வசந்தங்கள் வந்திடலாம் ...
பூக்களதும் பூத்திடலாம் ....
மறந்துவிட முடிந்திடுமோ
குயிலதனின் முதல்ராகம் !!!...

இதமாக தலை சாய்க்க
இடம் கொடுத்தேன் என்மடியில்...
அதன் கார்விலகி கவலைமாற
கடவுளிடம் தொழுது நின்றேன்

அபலையாக...

Monday, December 10, 2007

உறங்காத மௌனம் ...


இதயத்தின்
இதழ்களை
இதமாக வருடி,....
அலை அலையாய்
கேள்விகள்
அடங்காமல் எழ ,...
பதில் ஒன்றும் சொல்லாமல்
எங்கே மறைந்தாய் ?....
என் உயிரே,...

ஆயிரம்
கரங்கள் கொண்டு
அணைக்க துடிக்கிறதே
சோகம் ,...
சூரிய கதிர்களாய்
மனதை ,...

கவிதை மழை
பனியாய் தழுவ
தேடி தேடி....
தேங்குதே நெஞ்சம்
பூஞ்சோலையாம் !!!...
உனை காண ,..

அலைபாயும்
காற்றாய்
என் துயரம்,...
ஆதரவாய் இன்றும்
உறங்காத
உன் மௌனம் ,...

Friday, December 7, 2007

மறந்தாலும் ,...


இமைகளை
மூடினால் உன் பிம்பம் !!!,...
இதழ்களோ ,...
உன் பெயரை மட்டுமே
உச்சரிப்பேன் என்கிறது !!!,...

உன்
கவிதைக்களுக்கு மட்டுமே
என் காதுகள்
கவனம் கொடுக்கின்றன ,....

காணாமல் போகிறதே
இவ்வுலகம்
கண்முன்னில்
" கண்ணா " என்ற உன்
காந்த அழைப்பில்,..

ஏன் இத்தனை !!!....
என் சுவாசத்தை
கொஞ்சம்
வாசித்து பாரட,..
வாசமாய் வீசும்
உந்தன் நினைவே
எந்தன் மூச்சாய்,..

உளம் துடிக்க
மறந்தாலும் ,...
உயிர் எரியும்
ஜோதியாய் !!!... என்றும்
உனை பிரகாசிக்க
தீபமாய் !!!,...