Wednesday, March 14, 2012

அபயம் தேடி...


புகையூட்டப்பட்ட
இருட்டறையில் தப்பி  வர
துடித்தபடி மனது ..

துயரத்தோடு  கனவுகளும்
வெறுப்பின் துணையோடு
அபயம்  தேடி  அலைபாய

கடந்த கால
கதைகளிலெல்லாம்  மூடல் பனியாய்
சோகப்படலம் சுற்றி வர ..

புலம்பல் திரி கொளுத்தப்பட்டு 
பிரபஞ்சமெங்கும்  மானுடத்தின் அவலம்
பேரிடியாய் அதிர்ந்து  ஒலிக்கிறதே ..

                                                         விஷ்ணு ...

Sunday, October 16, 2011

உன் நினைவு



உயிர் பெரும்
ஒவ்வொரு கவிதைகளின்
ஓரத்திலும்
ஒரு உறுத்தல்
தங்கித்தான் இருக்கிறது ...
உன் நினைவுகளை
உயிர்பித்து கொண்டே ...
- விஷ்ணு

Saturday, July 11, 2009

சாபம் பெற்ற மலர்...




நம்மை நம்முள்
புதைத்துக்கொண்ட இரவுகள்
இனி வராமல் போகலாம் ..

உன்னால் நிரப்பப்பட்ட
என் உயிர் கோப்பை
ஒரு நாள் உடைபட்டு
என் உதிரத்தின் மணம்
உன் நினைவுகளில்
உலா வரலாம் ....
தளர்ந்து விடாதே ...

வரவேற்பறையில்
வாடிய மலரின் அலங்காரமா ?...
வேண்டவே வேண்டாம் ...
நேற்றைய தினங்களின்
நாட்காட்டி தாள்களாய்....
கிழித்தெறி என் கவிதைகளை ...

எவைகளின் பார்வைக்காய்
ஏங்கி எழுதுகிறேனோ
அவைகளை மூடிக்கொள் ..
திறக்கவே வேண்டாம் ...
என் கவிதைகளுக்காய்
உன் விழிகளை குருடாக்கி விடு ....

இருவரும்
பார்த்திருந்த நாட்களில்
இதயங்களைதானே
தொலைத்துகொண்டோம் ..
உன் நினைவுகளோடு
ஒரு ஜென்மத்தை கடந்துவிட்டேன் ..

பூக்கின்ற
மலர்கள் எல்லாம்
பூஜைக்கு மட்டுமா ???
இல்லை ...இல்லை
சவமஞ்சத்தை  அலங்கரி என
சாபம் பெற்று வந்த
மலர்களும் இல்லையா ...???...


Monday, November 24, 2008

பிரிவும் ஒரு காதல் தான் !!!...






பிரிவும்  ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...

பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...

Saturday, November 22, 2008

கனவுப்பறவை...






இதயத்துள்
புள்ளிகளில் தொடங்கி
வட்டமிட்டு வட்டமிட்டு
நாடி நரம்புகளை
அடக்க துடித்திருந்த
கனவுகளை ....

சிலுவையில் அறைந்து
சிறை படுத்திய திருப்தியில்
சிறகுகளை
முறித்துக்கொண்டு
திரும்ப நடக்கிறேன் ...

கடந்து வந்த சுவடுகளே
கை பிடித்திழுக்க
முளைக்க தொடங்கின ...
மீண்டும் சிறகுகள் ....