Wednesday, September 26, 2007

குரு ,....


என்னவளே......

கவியரசு
கம்பனுக்கு
புதுக்கவிதை
எழுத ஆசை !!!..
என்னிடம் வந்தான்,...
அனுப்பிவிட்டேன்
உன்னிடம்...
நீ தானே எனது குரு ,....

காமம்....


இளமைகளின்
இறுக்கம் ...
இருக்கும் வரை
நெருக்கம்....

நெருங்கியபின்
இறக்கம்....
இறங்கியபின்
வெறுக்கும்....

அன்பு.....


அன்பு ...

அழகான ஆயுதம் ...
"அமிர்தம்" போல் !!!..
அதிகமாக
யாருக்கும் கொடுக்காதே,...
நீயும் அதிகம்
பெறாதே .....
அழித்துவிடும்
இருவரையும் !!!....

"கவிநா"....


எனது

இனிய கவிதைத்தோழி....

"கவி" காக நான்

எழுதிய சில வரிகள்....

இனிமையானவள்......என்றும்
இளமையானவள்.......மனதில்...

இனியவள்
இவள் ஜன்னலோரம்
வந்துவிட்டால்
கடிகாரங்களுக்கு கூட
காய்ச்சல் வந்துவிடும் !!!....
நேரத்தை காட்ட
நினைவில்லை அவைகளுக்கு...!!..


நான்கைந்து வயதில்
பேச தொடங்கியவள்..
காற்றினோடும்
கடல் அலைகலோடும்.....
இவர்கள்
இருவர்க்கும் இடையே
மொழி பெயர்க்க
தென்றல் விழி வைத்து
காத்திருக்கும்......
இவள் வரும் ஜன்னல்
வழி பார்த்து.......


சில நேரங்களில்
ஓடங்கள் கூட
இவளிடம் கேட்பததுண்டு.....
நீ..
கடல் அலைகளையும் ,
காற்றையும்
கட்டி போட்டு விட்டால்
நாங்கள் கரை
சேர்வது எப்படி என,...
சிரிக்கின்றாள்,.....
சில நேரம் தனக்குள்ளே......


இவள்
நினைவுப் பறவை
சிறகடித்தால் அன்று
ஓவியங்கள் பல
ஊர்வலமே போகும்.....
ஜன்னலின்
திரை சீலை கூட
தானே சிரிக்கும்...!!!
வெட்கத்தால் தன் முகமே
தான் மறைக்கும்,....!!!...


இவள் மனம்
அழகான பூஞ்சோலை ,..
அது இன்று நேற்று
உருவானதல்ல
சிறு வயதில்
இவள் நட்ட நாற்றுகள்
வளர்ந்து இன்று
வண்ண பூன்சோலையாய்...
வாசம் வீசுகின்றன,..
வாசகர் இல்லா புத்தகமாய்,...


வாசிப்பவர் இல்லா ஓவியமாய்...
இவள் எழுத தொடங்கியது
எத்தனயோ
நாட்களுக்கு முன்னால்
நாட்கள் செல்ல செல்ல...
முதல் வாசகனை கிடைத்தது...
சகோதரியின் உருவத்தில்...
உற்சாகம் ஊட்ட ஆளில்லை
இருந்திருந்தால்
உயரத்தில் இருந்திருப்பாள்,..


நண்பர்கள் கூட்டத்தை
சிறைப்பிடிக்கவே
அன்பினால் ஆன
அரண்மனை அமைத்துள்ளால்...
அதில் அடைப்பட்டால்
தப்பி செல்ல மனம் வராது.....
தண்டனைகளோ !!!...
தவிர்க்க தோன்றா
நட்பின் போதை,..!!!..


இவள்
தாய் தந்தை
உடன் பிறப்பு என ..
அனைவரிடமும்
அன்பை அளித்து
அரவணைப்பை பெறுபவள்,..
ஆனால்
மனத்திற்க்குள் கொஞ்சம்
தனிமையில் வாழ்பவள்....


இவள்
இதயத்தில்
நண்பர்களுக்காகவே
நல்ல ஒரு இடத்தை
வேலி கட்டி வைத்துள்ளால்...அதில்
நாம்.... நமது.....
நல்ல நினைவுகளை
தைரியமாக விதைக்கலாம்.....
பசுமை மாறாமல் ...
என்றும் ஈரத்துடன் ...
காத்து வளர்ப்பாள்,...


இனிமையானவள் .....என்றும் !!!...
இளமையானவள் ...மனதில் !!!...

கற்பூர வாசனை ....


பௌர்ணமி
நிலவின் ஒளியை
நூலாக கோர்த்து
பட்டாடை செய்து வைத்தேன்......
நட்சத்திரத்தை எல்லாம்
முத்துக்களாய்
தைத்து விட்டேன்
முந்தானைக்கு அழகு சேர்க்க......
மல்லிகை பூவின்
மாநாடே நடத்தி விட்டேன்
சேலையில் சுகமான
மணம் சேர......

அழகான சேலை என்று
அக்கம் பக்கம் புரணி பேச....
காத்திருந்தேன் என்னவளின்
ஜென்ம தின பரிசளிக்க,....
பிறந்த நாளும் வந்தது !..
என்னவளும் வந்தாள் !..
பட்டாடை பொக்கிசத்தை
பவ்வியமாய் பரிசளித்தேன் !!!!....
பக்குவமாய் திறந்து பார்த்தாள் !!!....
கனல் தெரிக்கும்
அவள் பார்வையில்...!!!
சுருக்கென்று முள் தைத்தது
என் நெஞ்சில் !!!!.... அவள்
சுரிதார் போதுமென்று
சொன்ன போது !!!.....

பாட்டி சொன்ன பழமொழி ஞாபகம் வந்தது....
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?,.....

கடன்....


என் வீட்டில்
மலர்களுக்கு பஞ்சம் !!!...
உன் கவிதை
மலர்களை கொஞ்சம் !!!...
கடனாக தந்தால்
என் நெஞ்சம் !!!...
மாறிடுமே உன்
மலர்களுக்காக மஞ்சம் !!!...

கடற்கரை.....


அன்று
கடற்கரையில் .....
உன் வெட்கம்
என் முகம்
பார்க்க மறுத்தபோது ......

நீ
உன் பாதம்
எனும் தூரிகையால்
முத்திரை பதித்த
சித்திரங்கள்
அழியாமல் இருக்க ,...
அந்த கடல் அலைகலையே
நிற்க சொன்னேன் ,.......

அவைகளோ
ஓரத்தில் ஒதுங்கி
ரசித்து விட்டு ஓடியதுவே ....
அவைக்களுக்கும் வெட்கமோ ? .....

காரணம் ......
உன் ஓவியமா ?.....
இல்லை
நமது ஊடலா ?....

சாபம்....ஏனிந்த கோபம்...
என் மேல்
ஏனிந்த சாபம்
எனக்கு !!!....

அனுப்பி இருந்தேனே
என் கனவை....
காணவில்லையோ
நீயும் அதனை....

சொல்லிவிட்டேனே
தூது... அதனை ...
சொல்லவில்லையோ
அந்த நிலவு !!!...

நீர்..
ஊற்றாக பொங்குதே
உன் நினைவு...
அடக்கவும் முடியவில்லை...
அலை பாய வழியும் இல்லை....

நீறு பூத்த நெருப்பாக
உன் உருவம் !!!...
உள்ளில்...
நீர் தெளிக்க ஆளில்லை
ஈரமாக நீயும் இல்லை.....

சூன்யமாக
போகும் முன்னே
வந்து விடு !!!... நானும்
சூடமாக
கரைகின்றேன்
காற்றினிலே !!!...

பாசம்...பணம்,.. காசு...
ஒன்றே இந்த தேசம்....
பாசம் என்பதெல்லாம்
பகல் வேசம்,...
குணம் என்று
சொல்வதெல்லாம்
வெறும் கோசம்,....
கொடுப்பதை நிறுத்தினால்
நீயும் படு மோசம் !!!,...