Sunday, September 30, 2007

நீ...அரங்கேறத் துடிக்கும்
பரதத்தின்
அபிநய முத்திரைகளோ !!! ....
எண்ண தோன்றுகிறது
பெண்ணே .....
உன் இமைகளின்
அசைவு என்னை....!!!..

என்னவளே ...
இரும்பாக
இருந்த நானும்... சிறு
துரும்பாக
இளைத்துவிட்டேன்...!!!
இனியும் இழுக்காதே...
"காந்தமாம்"
உன் கருவிழிகளை காட்டி !!!....

தாயின்
அழைப்புக்கு வேகம் ...
தவழ்ந்து வரும் மழலை...
புரியவில்லை......
உன் தலையாட்டகளைத்தான்
சொல்கிறேன்...
என் இளம் தளிரே....

நாளைக்கு
மீதி வைத்து ...
பாதியிலே
நிறுத்துகின்றேன்....
ஏன் என்கிறாயா ?...
காத்திருக்கும் சுகத்தை
நீயும்
காணவேண்டும்...!!!... என் கண்ணே...

Friday, September 28, 2007

ஜனனம்.....


என்னவளே !!!..
நாம் காதலுக்கு
முன்னுரை எழுதும் முன்
முடியுரை எழுத துடிக்கிறார்கள்...


இது தொடர்கதையா?...
இல்லை.....
முன்னுரை இல்லா ஒன்றின்
முடியுரையா ?....

எல்லாம் உன் கையில் !!!...
என்னை பொருத்தவரை...

"தினமும் தானே மரணம்"
என் உயிர் வாழ்க்கை ஜனனம் ... !!!...

Thursday, September 27, 2007

மகா காவியம்.....


என்னவளே ....
காவியம் எழுத
அழகான வார்த்தைகள்
ஆயிரம் வேண்டும்....
யோசித்து பார்க்கிறேன் !!!..

"மகாகாவியமாம் "..!!!...

உன்னை
எழுதிய
பிரம்மனின்
இன்னல்களை....

Wednesday, September 26, 2007

குரு ,....


என்னவளே......

கவியரசு
கம்பனுக்கு
புதுக்கவிதை
எழுத ஆசை !!!..
என்னிடம் வந்தான்,...
அனுப்பிவிட்டேன்
உன்னிடம்...
நீ தானே எனது குரு ,....

காமம்....


இளமைகளின்
இறுக்கம் ...
இருக்கும் வரை
நெருக்கம்....

நெருங்கியபின்
இறக்கம்....
இறங்கியபின்
வெறுக்கும்....

அன்பு.....


அன்பு ...

அழகான ஆயுதம் ...
"அமிர்தம்" போல் !!!..
அதிகமாக
யாருக்கும் கொடுக்காதே,...
நீயும் அதிகம்
பெறாதே .....
அழித்துவிடும்
இருவரையும் !!!....

"கவிநா"....


எனது

இனிய கவிதைத்தோழி....

"கவி" காக நான்

எழுதிய சில வரிகள்....

இனிமையானவள்......என்றும்
இளமையானவள்.......மனதில்...

இனியவள்
இவள் ஜன்னலோரம்
வந்துவிட்டால்
கடிகாரங்களுக்கு கூட
காய்ச்சல் வந்துவிடும் !!!....
நேரத்தை காட்ட
நினைவில்லை அவைகளுக்கு...!!..


நான்கைந்து வயதில்
பேச தொடங்கியவள்..
காற்றினோடும்
கடல் அலைகலோடும்.....
இவர்கள்
இருவர்க்கும் இடையே
மொழி பெயர்க்க
தென்றல் விழி வைத்து
காத்திருக்கும்......
இவள் வரும் ஜன்னல்
வழி பார்த்து.......


சில நேரங்களில்
ஓடங்கள் கூட
இவளிடம் கேட்பததுண்டு.....
நீ..
கடல் அலைகளையும் ,
காற்றையும்
கட்டி போட்டு விட்டால்
நாங்கள் கரை
சேர்வது எப்படி என,...
சிரிக்கின்றாள்,.....
சில நேரம் தனக்குள்ளே......


இவள்
நினைவுப் பறவை
சிறகடித்தால் அன்று
ஓவியங்கள் பல
ஊர்வலமே போகும்.....
ஜன்னலின்
திரை சீலை கூட
தானே சிரிக்கும்...!!!
வெட்கத்தால் தன் முகமே
தான் மறைக்கும்,....!!!...


இவள் மனம்
அழகான பூஞ்சோலை ,..
அது இன்று நேற்று
உருவானதல்ல
சிறு வயதில்
இவள் நட்ட நாற்றுகள்
வளர்ந்து இன்று
வண்ண பூன்சோலையாய்...
வாசம் வீசுகின்றன,..
வாசகர் இல்லா புத்தகமாய்,...


வாசிப்பவர் இல்லா ஓவியமாய்...
இவள் எழுத தொடங்கியது
எத்தனயோ
நாட்களுக்கு முன்னால்
நாட்கள் செல்ல செல்ல...
முதல் வாசகனை கிடைத்தது...
சகோதரியின் உருவத்தில்...
உற்சாகம் ஊட்ட ஆளில்லை
இருந்திருந்தால்
உயரத்தில் இருந்திருப்பாள்,..


நண்பர்கள் கூட்டத்தை
சிறைப்பிடிக்கவே
அன்பினால் ஆன
அரண்மனை அமைத்துள்ளால்...
அதில் அடைப்பட்டால்
தப்பி செல்ல மனம் வராது.....
தண்டனைகளோ !!!...
தவிர்க்க தோன்றா
நட்பின் போதை,..!!!..


இவள்
தாய் தந்தை
உடன் பிறப்பு என ..
அனைவரிடமும்
அன்பை அளித்து
அரவணைப்பை பெறுபவள்,..
ஆனால்
மனத்திற்க்குள் கொஞ்சம்
தனிமையில் வாழ்பவள்....


இவள்
இதயத்தில்
நண்பர்களுக்காகவே
நல்ல ஒரு இடத்தை
வேலி கட்டி வைத்துள்ளால்...அதில்
நாம்.... நமது.....
நல்ல நினைவுகளை
தைரியமாக விதைக்கலாம்.....
பசுமை மாறாமல் ...
என்றும் ஈரத்துடன் ...
காத்து வளர்ப்பாள்,...


இனிமையானவள் .....என்றும் !!!...
இளமையானவள் ...மனதில் !!!...

கற்பூர வாசனை ....


பௌர்ணமி
நிலவின் ஒளியை
நூலாக கோர்த்து
பட்டாடை செய்து வைத்தேன்......
நட்சத்திரத்தை எல்லாம்
முத்துக்களாய்
தைத்து விட்டேன்
முந்தானைக்கு அழகு சேர்க்க......
மல்லிகை பூவின்
மாநாடே நடத்தி விட்டேன்
சேலையில் சுகமான
மணம் சேர......

அழகான சேலை என்று
அக்கம் பக்கம் புரணி பேச....
காத்திருந்தேன் என்னவளின்
ஜென்ம தின பரிசளிக்க,....
பிறந்த நாளும் வந்தது !..
என்னவளும் வந்தாள் !..
பட்டாடை பொக்கிசத்தை
பவ்வியமாய் பரிசளித்தேன் !!!!....
பக்குவமாய் திறந்து பார்த்தாள் !!!....
கனல் தெரிக்கும்
அவள் பார்வையில்...!!!
சுருக்கென்று முள் தைத்தது
என் நெஞ்சில் !!!!.... அவள்
சுரிதார் போதுமென்று
சொன்ன போது !!!.....

பாட்டி சொன்ன பழமொழி ஞாபகம் வந்தது....
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?,.....

கடன்....


என் வீட்டில்
மலர்களுக்கு பஞ்சம் !!!...
உன் கவிதை
மலர்களை கொஞ்சம் !!!...
கடனாக தந்தால்
என் நெஞ்சம் !!!...
மாறிடுமே உன்
மலர்களுக்காக மஞ்சம் !!!...

கடற்கரை.....


அன்று
கடற்கரையில் .....
உன் வெட்கம்
என் முகம்
பார்க்க மறுத்தபோது ......

நீ
உன் பாதம்
எனும் தூரிகையால்
முத்திரை பதித்த
சித்திரங்கள்
அழியாமல் இருக்க ,...
அந்த கடல் அலைகலையே
நிற்க சொன்னேன் ,.......

அவைகளோ
ஓரத்தில் ஒதுங்கி
ரசித்து விட்டு ஓடியதுவே ....
அவைக்களுக்கும் வெட்கமோ ? .....

காரணம் ......
உன் ஓவியமா ?.....
இல்லை
நமது ஊடலா ?....

சாபம்....ஏனிந்த கோபம்...
என் மேல்
ஏனிந்த சாபம்
எனக்கு !!!....

அனுப்பி இருந்தேனே
என் கனவை....
காணவில்லையோ
நீயும் அதனை....

சொல்லிவிட்டேனே
தூது... அதனை ...
சொல்லவில்லையோ
அந்த நிலவு !!!...

நீர்..
ஊற்றாக பொங்குதே
உன் நினைவு...
அடக்கவும் முடியவில்லை...
அலை பாய வழியும் இல்லை....

நீறு பூத்த நெருப்பாக
உன் உருவம் !!!...
உள்ளில்...
நீர் தெளிக்க ஆளில்லை
ஈரமாக நீயும் இல்லை.....

சூன்யமாக
போகும் முன்னே
வந்து விடு !!!... நானும்
சூடமாக
கரைகின்றேன்
காற்றினிலே !!!...

பாசம்...பணம்,.. காசு...
ஒன்றே இந்த தேசம்....
பாசம் என்பதெல்லாம்
பகல் வேசம்,...
குணம் என்று
சொல்வதெல்லாம்
வெறும் கோசம்,....
கொடுப்பதை நிறுத்தினால்
நீயும் படு மோசம் !!!,...

Tuesday, September 25, 2007

காதல்,.........காதல்,.........
அன்பின் இருப்பிடம் அன்று....
எதிர்பார்ப்பின் உறைவிடம் இன்று.....

காதலி...
அழகாக வேண்டும்..
படித்திருக்க வேண்டும்...
சொல்லும் போதெல்லாம்
சொன்ன இடத்திற்க்கு வரவேண்டும்,...

காதலன்...
நல்ல வேலை, வசதி, அழகு,
வேறொரு பெண்ணையும் பார்க்க கூடாது
காதலன் வீட்டில்
ஆட்களோ அதிகம் வேண்டாம் !!!....
எதிர்பார்ப்புகள் தான்
எத்தனை... எத்தனை...

மனதை பார்ப்பதில்லை,..
உண்மை காதல்
உறங்கும் இடத்தை...
அழகு, அந்தஸ்தது, வசதி, வேலை...
எல்லாம் வெளி  வேசங்கள்,..
கலைந்து போகும் முகச்சாயங்கள் ...

இன்று
எல்லா காதலர்களும்
ஏமாற்றி கொண்டும்,
ஏமாறிக்கொண்டும்...
ஆண்கள், பெண்கள் என
அடையாளமில்லை..
எல்லாம்
"எதிர்பார்ப்பின் ஏமாற்றங்கள்" !!!! ...
பத்து வயதில்
விளையாட்டு காதல்....
இருபது வயதில்
இனக்கவர்ச்சி காதல்...
இருபத்தைந்து வயதில்..
கொஞ்சம் பாதிப்பை
ஏற்படுத்தும் காதல்..


வாழ்க்கை துணையோடு
முப்பது வயதில்
உண்மை காதல்...!!!
முன்னோர் சொன்னது...!!!

சிறைபட்ட
காதல் தான்,...அதுவும் ...
விட்டுக்கொடுக்கவேண்டும்
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்....
ஏமாற்றம் வெளியே தெரியாது ...
ஏமாந்தாலும்...!!!..

எல்லா வகையிலும்
கைவிலங்கிட்ட காதல்...!!!!...
"விட்டு கொடுத்தலால்
எதிர்பார்ப்பை கொன்றாலே"
காதலுக்கு விடுதலை !!!! ...

சிறை பட்டுதவிக்கும்
இந்த காதல்களை
விடுவித்தால்
அதுவே உண்மை காதல்.....
காதலுக்கு செய்யும்
"முதல் மரியாதை"..

Saturday, September 22, 2007

இடைஞ்சல்.....


உன்
கொலுசின்
ஓசை கூட
கொஞ்சலாய்
தெரிந்த எனக்கு !!!....

இயலாமையால்,
இன்று நீ...
இருமுவது கூட
இடைஞ்சலாய்
தெரிகிறது....
என் உறக்கத்திற்கு,....!!!

Friday, September 21, 2007

துணை.....

என்
நினைவுகள்
இருட்டினில் நடக்கின்றன,.......
துணையாக..
உன் மௌனம் மட்டும்,.....

Wednesday, September 12, 2007

நான்.....கரையான்...
எறும்புகளை...
காத்து கிடக்கின்றேன்,...
நன்றி கடனாய்,.....
என் ஆத்மாவை பிரிந்த நான்.....

கடந்து வந்த
நாட்களை நினைக்கின்றேன்,...
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

என் ஆத்மாவின்
உற்பத்திக்கு
பாதிப் பாதியாய்
வித்திட்ட
என் தாய் தந்தைக்கோ,....

இல்லை......
பத்து மாதம் எனை சுமந்து
பக்குவமாய் உருக்கொடுத்த
என் தாயின் கருவறைக்கோ......
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

என்னில்
அறிவொளியை ஏற்றி..
என் வாழ்வை
பகலாக்கிய குருவுக்கோ.....
இல்லை........
ஏகாந்த உலகை
எனக்கு காட்டாமல்,...
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
ஆறுதலாய்
எனை அரவணைத்த
தோழர்களுக்கோ....
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

ஏக விரதயாய்
என்னில் கலந்து
என் சுமைகளையே
சுவையாக மாற்றி
என்னில் பாதியான
என்னவள்க்கோ,....
இல்லை.........

தள்ளாத வயதினிலே
விழுதுகலாய் எனை தாங்கிய
என் சந்ததிக்கோ.....
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

இணை பிரியாமல்
என்னில் இருந்து
இயற்கைக்கு அடிமையாய்
எனை பிரிந்த...
என் ஆத்மாவிற்கோ......
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......

கடந்து வந்த நாட்களிலே...
கடன் பட்டு கிடக்கின்றேன்,...
பூமித்தாயின் மடியில்,...
பாரமாய் அவள்க்கும்.....
கண்களை மூடிவிட்டார்கள் ...
உறக்கம் வருகிறது....
உறங்குகின்றேன்,.....
தென்றலாய் வரும்
அவள் சுவாசத்தின் தாலாட்டில்,......

நன்றி கடனாய் !...
கரையான், எறும்புகளை....
காத்து,...காத்து,...

Thursday, September 6, 2007

சித்திரம்......ஓவியத்தை
தானமாக தந்து
உதவிய காயத்ரிக்கு
நன்றிகள் பல.....
அழைத்ததும் ஏனோ?.....
மீண்டும் என்னில்
கலந்ததும் ஏனோ?.....
பூவில் தவழும்
பனித்துளி போல்
என்னில்
உறங்கும் உன்னை
உணர்த்தியதும் ஏனோ?......
என்
கனவுகளை
கலைத்ததும் ஏனோ?......

விரகத்தில்
மூழ்கி எடுத்த
என்
வேதனை முத்துக்களை,
வீட்டுக்குள்
பூட்டி வைத்தேன்,....
அதன்
விலங்குகளை
உடைத்து
வீதிக்கு வர
வித்திட்டதும் ஏனோ?.....
அதை
விலை பேசியதும் ஏனோ?.....

ரத்தத்தில் நனைத்த
மயில் தோகை
கொண்டு சித்திரம்
வரைந்ததும் ஏனோ ?.....
அதை
என் மனதில்
சிலையாக
நிறுத்தியதும் ஏனோ ?....

Tuesday, September 4, 2007

சொந்தம்,...


கீழ்வானில்
உதயமாகும்
சூரியனை போல்
மீண்டும் மீண்டும்,... !!!
என் நினைவுகளில்
உதிக்கின்ற உணர்வு,....
என் மனதோட்டத்தில்
கண்ணீர் பூக்களாய்
உன் நினைவு,.....

நீ
எனக்கு தானம் தந்த
துக்கங்கள் மட்டுமே
சொத்தாக எனை
சொந்தம் கொண்டுள்ளன,.....
அந்த ஆத்தோர
நாணல் கூட
நம் கதையை
பாடி நடக்கிறதே,....

எத்தனை கதைகள் !!!
எத்தனை கனவுகள் !!!
அத்தனை நிஜத்தையும்
நிழலாக மாற்ற
நான் என்ன
தவறு செய்தேன் உனை
காதலித்ததை தவிர,......

Saturday, September 1, 2007

ஆசை,...


உன் மனதின்
வீணையை மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....

இனிய பௌர்ணமி
ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரியனாக
சுடுகிறதோ உன்னை !!!....
உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....

நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....

பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்துகொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......