Thursday, July 26, 2012

ஊமை ...

ஊமை ...
********

நட்புக்குள்
நஞ்சாகும் பொய்கள் ...
காதலுக்குள் சிறகடிக்கும்
சந்தேகப்பறவைகள்
தவிர்க்கப்பட்டதன் காரணம்
தெரியாமல்
அலைபாயும் தவிப்புகள் ...
புதிய ஞானத்தை
கோலமிட்டு செல்கின்றன
என் வாசலில் ...
ஊமையான
புல்லாங்குழலாகிறேன் ...
ஊனமான மனதோடு
- விஷ்ணு

1 comment:

SIVAYOGI said...

ஊனமென்று முடங்காமல் உணர்தேழு புதிய சிந்தையுடன் ....