Tuesday, December 18, 2007

அபலையாக...



சுகமான குயில்நாதம்
சோகமாக வரக்கண்டேன் ...
ஏகாந்த வேளை அது ...
ஏறெடுத்து பார்த்திட்டேன் ...

ஆதரவாய் செவிசாய்த்தே...
அருமை குயில் கதைகேட்டேன் ...
கானக்குயில் வார்த்தையிலே
கதைகள் எல்லாம் கண்ணீராய் !!!...

சின்ன சின்ன ஆசைக்களும் ...
சிறிதான கனவுகளும் ...
பூத்திடவே தவம் செய்த
ஜோடிக்குயில் மறைந்த கதை !!!...

அன்றொருநாள் இரை தேட
ஆண்குயிலும் போனவேளை
அடங்காத பசியோடே
ஆர்பரித்த காட்டு தீயும் ...

கண்ணிமைக்கும் நொடியினிலே
எரிந்துபோன மாயம் என்ன ..
என்னவளின் கனவுகளும்
இமைமூடா நினைவுகளும் !!!...

சொன்னதுவே சோகமாக
ஆண்குயிலும் அழுகையோடே ...

கடந்துபோன இன்பங்களும் ..
விரகத்தின் துன்பங்களும்...
துணையாகி போனதுவே
ஆண்குயிலின் இரவுகளில் ....

வசந்தங்கள் வந்திடலாம் ...
பூக்களதும் பூத்திடலாம் ....
மறந்துவிட முடிந்திடுமோ
குயிலதனின் முதல்ராகம் !!!...

இதமாக தலை சாய்க்க
இடம் கொடுத்தேன் என்மடியில்...
அதன் கார்விலகி கவலைமாற
கடவுளிடம் தொழுது நின்றேன்

அபலையாக...

6 comments:

காயத்ரி said...

அபலையின் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்க வேண்டுமென்று நானும் வேண்டிக்கொள்கிறேன் இறைவனை! கவலை கூட கவிதையான மாயமென்ன உங்கள் விரல்களில்....
உங்கள் தோழி கவிநா...

Vishnu... said...

உங்கள் வருக்கையை வரவேற்கிறேன் காயத்ரி அவர்களே !!!...
வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ,...

சோபி said...

Super vishunu unga kavithai

enrum anpudan
anpu tholi
NANTHA

Vishnu... said...

உங்கள்
வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நந்தா !!!...அவர்களே !!!....

அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ....

இனியவள் said...

அருமை குயில்கதைகேட்டு,ஆதரவாய் நீ இருக்க என் வாழ்த்துக்கள்.....


கவிதை நன்றாக உள்ளது

Vishnu... said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் ... இனியவள் அவர்களே ...