நம்மை நம்முள்
புதைத்துக்கொண்ட இரவுகள்
இனி வராமல் போகலாம் ..
உன்னால் நிரப்பப்பட்ட
என் உயிர் கோப்பை
ஒரு நாள் உடைபட்டு
என் உதிரத்தின் மணம்
உன் நினைவுகளில்
உலா வரலாம் ....
தளர்ந்து விடாதே ...
வரவேற்பறையில்
வாடிய மலரின் அலங்காரமா ?...
வேண்டவே வேண்டாம் ...
நேற்றைய தினங்களின்
நாட்காட்டி தாள்களாய்....
கிழித்தெறி என் கவிதைகளை ...
எவைகளின் பார்வைக்காய்
ஏங்கி எழுதுகிறேனோ
அவைகளை மூடிக்கொள் ..
திறக்கவே வேண்டாம் ...
என் கவிதைகளுக்காய்
உன் விழிகளை குருடாக்கி விடு ....
இருவரும்
பார்த்திருந்த நாட்களில்
இதயங்களைதானே
தொலைத்துகொண்டோம் ..
உன் நினைவுகளோடு
ஒரு ஜென்மத்தை கடந்துவிட்டேன் ..
பூக்கின்ற
மலர்கள் எல்லாம்
பூஜைக்கு மட்டுமா ???
இல்லை ...இல்லை
சவமஞ்சத்தை அலங்கரி என
சாபம் பெற்று வந்த
மலர்களும் இல்லையா ...???...


12 comments:
நண்பரே...மறுபடியும் கவிதை கண்டதில் மகிழ்ச்சி....
நண்பரே
மிக்க மகிழ்ச்சி
நீண்ட நாளுக்குப் பிறகு
வாழ்த்துகள்
தமிழ்ப்பறவை said...
நண்பரே...மறுபடியும் கவிதை கண்டதில் மகிழ்ச்சி....
மிக்க நன்றிகள் நண்பரே ... கொஞ்சம் இடைவெளி அதிகமாகி விட்டது.. வேலை பளு ..காரணம் .. இனி தொடர்ந்து வருவேன் வலை உலகில் ...
அன்புடன்
விஷ்ணு ...
// திகழ்மிளிர் said...
நண்பரே
மிக்க மகிழ்ச்சி
நீண்ட நாளுக்குப் பிறகு
வாழ்த்துகள் //
மிக்க நன்றிகள் நண்பரே ... கொஞ்சம் இடைவெளி அதிகமாகி விட்டது.. இனி தொடர்ந்து வருவேன் .. நலமா ?..
அன்புடன்
விஷ்ணு ...
Nice Blog. Congrats.
-Zakir Ali ‘Rajnish’
{ Secretary-TSALIIM & SBAI }
[Editor- Children’s Poem & Adult’s Poem]
Congrulation very nice
"In the name of God"
Hello users,
Please visit my website and link it:
bahayiatbibaha.blogfa.com
(Thank you)
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
NICE
அருமை...
Post a Comment