Monday, March 3, 2008

சமர்ப்பணம் ...




உன் நிழல்களில்
நிஜத்தை தேடிய
என் நினைவுகள்
சிதையிலே தீ கனலாய் ...

ஓசைகள்
ஒடுங்கிவிட்ட
கள்ளிமுள் காட்டின்
காரிருள்
மௌனங்கள்
கண்களுக்கு
காட்சிகளாய் ....

கண்ணீர் ஆற்றின்
கரையோரம்
கருநாகம் ஊர்கின்ற
மண் கோபுரத்தின்
விஷ வாடையும்
பலி மந்திரமும்
பகல் கனவுகளாய் ....

உயிர் பெறும்
ஒவ்வொரு கணங்களும்
நீ எனக்கு
சமர்ப்பணமாய்
சார்த்திய
வாடா மலர்களே .....

6 comments:

காயத்ரி said...

உயிர்பெறும் ஒவ்வொரு கணங்களும்
நீ எனக்கு சமர்ப்பனமாய் சார்த்திய
வாடா மலர்களே!

அருமையான வரிகள்., அடிமனத்தின் துக்கத்தை
அகழ்ந்தெடுத்து கொணர்கின்றன உங்களின் இந்த கவிதை...
இது கவிதையா? அல்லது உங்களின் உணர்வுகளா? உணர்வுகளாயின்
உருக்கிவிட்டது என் மனதை...

என்றும் நட்புடன்
கவிநா....

Vishnu... said...

உணர்வுகள் தானே
கவிதையாய்
சில நேரம் பிறக்கிறது தோழியே ...
உனது
வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றிகள்
எனது இனிய தோழியே ..

என்றும்
அன்புடன்
இனிய தோழனாக
விஷ்ணு ..

காஞ்சனை said...

ஆரம்ப வரிகளே அசத்தல். நன்று

Vishnu... said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சகாரா அவர்களே ..
அன்பு வணக்கங்களுடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ..

Anonymous said...

Nagyon szép!

Anonymous said...

Nagyon szép! http://csermelyweboldal.extra.hu