Wednesday, July 16, 2008

தூசிகளாய் ...

























நீ காதலை
உணர்ச்சிகரமாக சொல்லிய
அந்த இரவில்...
உனக்காக
நான் வடித்த கவிதை ..
உனது இதய அறையில்
எங்கோ ஒரு மூலையில்
தூசிபோல...

இனியும்
சில வருடங்கள்
அது தங்கி இருக்கலாம்
யாருமே அறியாமல் ..

பனிக்காலம்
மழைக்காலம் என்பது போல்
மறதிக்காலம்
உன் மனதை
மூடும் வரை ..

அதன் பின் ..
வேறொரு இரவு ..
வேறொரு கவிதை என
தூசி மீது தூசி படர்வது போல் ,..

இப்படித்தான்
இவ்வுலகில்
மீண்டும் மீண்டும்
காதல்களும்
கவிதைகளும்
தூசிகளாய் ....

16 comments:

காயத்ரி said...

"Ippadithan ivvulakil meendum kaathalkalum kavithaikalum thoosikalaai!"

Manathai thotta kavithai, vaditha viralkalukkum, thulirtha manathirkum vaazhthukkal, nanbare....

kavinaaa...

Vishnu... said...

உங்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்
அன்புத்தோழி
கவிநா அவர்களே ..
அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன் ...
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ,..

Anonymous said...

கவிதை அருமை, மிக அருமை விஷ்ணு.
முத்துக்கள் போல் அழகான வார்த்தைகளால் கோர்த்து இருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்

Vishnu... said...

மனமார்ந்த நன்றிகள் கவி கலை அரசன் அவர்களே ..
உங்கள் வருகையும் வாழ்த்துக்களும் எனை இனியும் நிறைய எழுத தூண்டுகின்றன..அடிக்கடி வருகை தந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் ..
அன்புடன் விஷ்ணு ..

Divya said...

அழகான வார்த்தைகளுடன் கவிதை அருமை, மிகவும் ரசித்தேன்!

பாராட்டுக்கள் விஷ்ணு!

Vishnu... said...

//அழகான வார்த்தைகளுடன் கவிதை அருமை, மிகவும் ரசித்தேன்!

பாராட்டுக்கள் விஷ்ணு!//

மிக்க நன்றிகள் திவ்யா ..

மீண்டும் வரவேண்டும் ...
உங்கள் கருத்தை
தயங்காமல் தரவேண்டும் ......


அன்பு கலந்த
வணக்கங்களுடன்
விஷ்ணு ..

குட்டிபிசாசு said...

கவிதை அருமை!

Vishnu... said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் குட்டி பிசாசு அவர்களே ...

muthukumaran said...

Very nice vishnu

Vishnu... said...

Thanks...Muthukumaran..

Visit again...

Anonymous said...

வணக்கம் விஷ்னு!!

என்ன கூறுவது என்று தெரியவில்லை!! மனதை தொட்ட கவிதை...

இப்படிதான் மீண்டும் மீண்டும் காதல்களும்,கவிதைகளும் துசிகளாய்!!

Vishnu... said...

//இனியவள் said...
வணக்கம் விஷ்னு!!

என்ன கூறுவது என்று தெரியவில்லை!! மனதை தொட்ட கவிதை...

இப்படிதான் மீண்டும் மீண்டும் காதல்களும்,கவிதைகளும் தூசிகளாய்!!//

வருக வருக ..என் இனிய தோழி இனியவள் அவர்களே ...

உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ...

என்ன நான் சொல்வது சரி தானே ...
இன்றைய ..
கவிதைகளும் ..
காதல்களும்


அடிக்கடி வர
அன்புடன் வேண்டும் ..

என்றும்
உனது இனிய தோழன்
விஷ்ணு

thamizhparavai said...

//மீண்டும்,மீண்டும் கவிதைகள் மற்றும் காதல்கள் தூசிகளாய்...//
உண்மைநிலையின் கவிதை வடிவம், சற்று உறைத்தாலும் உண்மைதானே...

Vishnu... said...

// தமிழ்ப்பறவை said...
//மீண்டும்,மீண்டும் கவிதைகள் மற்றும் காதல்கள் தூசிகளாய்...//
உண்மைநிலையின் கவிதை வடிவம், சற்று உறைத்தாலும் உண்மைதானே...//

உண்மை தான் நண்பரே ..
கவிதையும் காதலும் துசி என்று சொன்னதின் அர்த்தம் இதை படித்தால் புரியும்
நேரம் கிடைக்கையில் படியுங்கள் ..

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=151&t=28583&start=15


நான் இந்த கவிதை ...
ஒரு பெண் சொல்வது போல சொல்லி இருக்கிறேன் ...
அதில் இணைத்திருக்கும் புகைப்படம் பார்த்தால் தெரியும் ..

அந்த கவிதையின் நாயகன் ...
ஒரு உன்னதமான இரவில் ..
அவளோடு உணர்ச்சிகரமாக காதலை சொல்கிறேன் ..
அவள் அதை உண்மை என நம்பி ..
அவனுக்காக அழகாக காதல் கவிதை வடிக்கிறாள் ..
அதை அவனிடமும் சொல்கிறாள் ...
கொஞ்ச நாட்களில் அவனது சுய ரூபம் தெரிகிறது ..
அப்போது புரிகிறது அவளுக்கு...
அவள் எழுதிய கவிதை ஒரு தூசி போல் தான் அவனை பொறுத்தவரை என ..

அவள் சொல்கிறாள் ..கொஞ்ச நாளில் உனது இதய அறையில் ஒளிந்திருக்கும் எனது கவிதை தூசி மறைந்து விடும் ..உனக்கு மறவி வரும்போது ..

அதன் பிறகு நீ இப்படி என்னிடம் காதலை சொன்னது போல ..
மீண்டும் ஒரு இரவை..
நீ யாரிடமாவது உருவாக்குவாய் ..
அப்போது ..மீண்டும் ஒரு கவிதை பிறக்கும் ..
அதும் இது போல
தூசியாகவே ..உனக்கு தெரியும் .......

தனக்கு ஏற்பட்ட மறக்க முடிய அனுபவத்தால் ...அவள் சொல்கிறாள் ..இப்படித்தானோ ..இவ்வுலகில்...மீண்டும் மீண்டும் ..காதல்களும் ..கவிதைகளும் ..தூசிகளாய் என ..

இதில் ..அவள்..வைத்திருந்த காதல்...உண்மை அவள்.. எழுதிய கவிதையும் ..உண்மை ...
அமைந்த காதலன் ..அவளுக்கு சொல்லி விட்டு போய் விட்டான் ...
உனது காதலும்..உனது கவிதையும் தூசி என ...

மன வெறுப்பில் ..அவள் கவலையுடன் சொல்வதாக ..அமைத்திருக்கிறேன் ...


வருகைக்கும் வாழ்த்துக்கும் ..நன்றிகளுடன்
விஷ்ணு ..

thamizhparavai said...

நண்பர் விஷ்ணுவுக்கு....
இப்போது தெளிவாகப் புரிகிறது.தாங்கள் பெண்ணின் மனநிலையில் சொல்ல வந்தது.மிகச்சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ஆனால் ஒரு பொதுப்பாலாக நாங்கள் பாவித்தோம்.அப்படிப்பார்த்தாலும் கூட இது ஒரு தத்துவக்கருத்து போல் பொருந்தியதுதான் கவிதையின் அழகே.
கவிதையில் நீங்கள் உங்கள் முகம் பார்த்திருக்கலாம்.ஆனால் படிப்பவர்களுக்கும் உங்கள் முகமே தெரியாமல்,ஒரு கண்ணாடி போல் எங்கள் முகம் தெரிந்தது ஆச்சரியமே...ஆரம்பத்தில் தெரிந்தோ,தெரியாமலோ ஒட்டிய காதல்(அப்பொழுது தூசி அல்ல),முடியும் போது விரும்பினாலும்,விரும்பாவிடினும் அது தூசிதானே, மற்றொரு காதல் வருகையில்.
நன்று நண்பரே....

Unknown said...

இதில் ..அவள்..வைத்திருந்த காதல்...உண்மை அவள்.. எழுதிய கவிதையும் ..உண்மை ...
அமைந்த காதலன் ..அவளுக்கு சொல்லி விட்டு போய் விட்டான் ...
உனது காதலும்..உனது கவிதையும் தூசி என ...

மன வெறுப்பில் ..அவள் கவலையுடன் சொல்வதாக ..அமைத்திருக்கிறேன் ...

***

என் தோழி ஒருவளின் உண்மைக் கதையாய் இருக்கிறதே? பெண்ணாக பாவித்து எழுதுவது அவ்வளவு சுலபமல்ல என்று எண்ணுகிறேன்!