நீண்ட
நேரமாய்
மௌனம் எனை
விழுங்கிக்கொண்டு ..
அறையின்
வலது மூலை
திறந்த ஜன்னலில்
என் தேடல்களின்
தொடக்கமாய்
பகல் உதிர்கிறது
பழுத்த இலையாக ...
உன் விழிகள்
என் கனவுகளுக்கு
மருதாணி வைத்து
அழகு பார்த்த நாட்கள் ..
உன்
இளம்பிறை
விழிக்கதிரில்
உறக்கத்தை மறந்து
ஒளி வீசிய
என் இரவுகள் ...
ஒரே வினாடியில்
நிசப்தமான
நெஞ்சின் தாளமும்
ஓலமிட்டு அழ வைத்த
உன் பிரிவும் ..
நரகக்கோட்டையின்
மதில்கள் முட்டி
சிதைபட்ட ஆத்மாவுமாய் ..
இரவுகளை தேடுகிறேன்
எனை அழைக்க
நீ வருவாய் என ...
நேரமாகிறது
இந்த பகலுக்கு ...
கதிரவனே
கண் மறைந்திடு ...
நிழலும் நிஜமாகும்
நேரமிது ..
14 comments:
வணக்கம் குட்டிப்பையா {profile படத்துக்குச் சொன்னேன்}
//ஒரே வினாடியில்
நிசப்தமான
நெஞ்சின் தாளமும்
ஓலமிட்டு அழ வைத்த
உன் பிரிவும் ..//
மென்மையான நல்ல கவிதை
தொடருங்கள்....
அன்புடன் ஜீவன்...
///தங்கராசா ஜீவராஜ் said...
வணக்கம் குட்டிப்பையா {profile படத்துக்குச் சொன்னேன்}
//ஒரே வினாடியில்
நிசப்தமான
நெஞ்சின் தாளமும்
ஓலமிட்டு அழ வைத்த
உன் பிரிவும் ..//
மென்மையான நல்ல கவிதை
தொடருங்கள்....
அன்புடன் ஜீவன்...//
குட்டி பையனின் அன்பான வணக்கங்கள் ஜீவன் அவர்களே
ஆச்சர்யம் நண்பரே ...இப்போது தான் பதிவு செய்தேன் ..
ஒரே வினாடியில்
உடன் பின்னூட்டம்
மிக மகிழ்ச்சி நண்பரே ...
வாழ்த்துக்கும் வருகைக்கும் ...
அடிக்கடி இந்த குட்டி பையனை காண வாருங்கள் ...
அன்புடன்
என்றும் உங்கள் தோழன்
விஷ்ணு
கவிதை அருமை விஷ்ணு!
// ஜோதிபாரதி said...
கவிதை அருமை விஷ்ணு!//
மிக்க மகிழ்ச்சி ...ஜோதி பாரதி அவர்களே ...
நல்ல ஒரு அண்ணனாய் எனக்கு நீங்கள் தரும்
உற்சாக மூட்டல்கள் ...
நன்றிகலந்த வணக்கங்களுடன்
விஷ்ணு
//உன் விழிகள்
என் கனவுகளுக்கு
மருதாணி வைத்து
அழகு பார்த்த நாட்கள் ..//
அழகான வரிகள்..!! :))))))
மொத்தத்தில அழகான கவிதை அண்ணா..!! :)))
//ஸ்ரீமதி said...
//உன் விழிகள்
என் கனவுகளுக்கு
மருதாணி வைத்து
அழகு பார்த்த நாட்கள் ..//
அழகான வரிகள்..!! :))))))
மொத்தத்தில அழகான கவிதை அண்ணா..!! :)))//
வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இனிய தங்கையே ..
அடிக்கடி வரவேண்டும் ..
சரியா...
அன்பு
அண்ணா ..
i added ur blog(s) in my google reader.. thanks...
மற்றுமொரு இனிய கவிதை...
//அறையின்
வலது மூலை
திறந்த ஜன்னலில்
என் தேடல்களின்
தொடக்கமாய்
பகல் உதிர்கிறது
பழுத்த இலையாக //
நீள் வெறுமைப் பாலைவனம் கடந்த அலைச்சலை மகிழ்வோடு முடிக்கும் தருணத்தை அழகிய வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள்...(கவிதை பற்றிய எனது புரிதல் தவறாய் இருப்பின் பொறுத்தருள்க...)
// தமிழ்ப்பறவை said...
i added ur blog(s) in my google reader.. thanks...//
மிக்க நன்றிகள் நண்பரே ...
தனிமடல் அனுப்பலாம் என நினைத்தேன் ஆனால் உங்கள் மின்னஞ்சல் முகவரி இல்லை ..
நேரம் கிடைக்கையில் தொடர்பு கொள்ளுங்கள் ..
pksvichu@gmail.com
அன்புடன்
விஷ்ணு
// தமிழ்ப்பறவை said...
மற்றுமொரு இனிய கவிதை...
நீள் வெறுமைப் பாலைவனம் கடந்த அலைச்சலை மகிழ்வோடு முடிக்கும் தருணத்தை அழகிய வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள்...(கவிதை பற்றிய எனது புரிதல் தவறாய் இருப்பின் பொறுத்தருள்க...)//
உண்மைதாய் தான்
நண்பரே ...
உங்கள் புரிதல் மிக சரியே ..
இந்த கவிதையில் ....
கடந்த போன நேரம் முழுவதும் மௌனமாய் வெறுமை குடி கொண்டு ..
இரவு தொடங்கினால் அவளை தேடத்தொடங்கும் ..
நல்ல நேரங்கள் ..
அதை தான் அப்படி சொல்லி இருந்தேன் ..
கவிதையாய் மிக ஆழமாக ரசிக்குறீர்கள்
மிக்க நன்றிகள் ..அடிக்கடி வந்து ..உற்சாகம் தர வேண்டுகிறேன் ..
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
உங்கள் கவிதைகள் எல்லாம் என் நிலையிலிருந்து எழுதியது போலவே இருக்கின்றன நண்பா...
நல்ல கவிதைகள்.. அருமை..
//Gokulan said...
உங்கள் கவிதைகள் எல்லாம் என் நிலையிலிருந்து எழுதியது போலவே இருக்கின்றன நண்பா...
நல்ல கவிதைகள்.. அருமை..//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பா ..
எனது தொடக்கம் முடிந்துவிட்டது
நீங்கள் தொடங்கி இருக்குறீர்கள் ..
எல்லாம் நலமாகும்
இயற்கை வழிகாட்டும்
என்றும் இனிய தோழனாக ...
விஷ்ணு
** உன் விழிகள் என் கனவுகளுக்கு மருதாணி வைத்து அழகு பார்த்த நாட்கள்**
இந்த வர்ணனை மிகவும் அழகாக இருக்கிறது, கவிஞரே! :-)
** உன் விழிகள் என் கனவுகளுக்கு மருதாணி வைத்து அழகு பார்த்த நாட்கள்**
இந்த வர்ணனை மிகவும் அழகாக இருக்கிறது, கவிஞரே! :-)
Post a Comment