நான்
அன்றும்
வழக்கம்போல்
பேருந்து நிறுத்தத்தில் ...
பட படக்கும்
விழிகளோடு
சிறகடித்து வருகிறாய் ..
நெருங்கி வர வர
எனை நோக்கி ...
மெல்லிய புன்னகை !!!...
அந்த புன்னகையில்
சிறிதாக சுருங்கிய
இந்த பிரபஞ்சம் ...
இன்றும் சிறிதாகவே ...
விமோசனமே இன்றி
விரியாமல் ...
மீண்டும் மீண்டும்
சொன்னதையே
சொல்லிக்கொண்டிருந்தால்
எதையும்
எதுவுமாக்கலாம் ...
தொடர்ந்த
நம் சந்திப்புகளில் ..
சொல்லி சொல்லி
என்னில் நீ
எதை ..எதுவாக்கினாய் ???..
இன்றும் எனக்கு
புரியாத புதிராய் ...
காலங்கள்
பல கடந்தும் ...
மனதில் தினம் சந்திக்கிறேன் ..
அதே காலை...
அதே நிறுத்தம் ...
அனைத்தும்
அப்படியே ..
ஆனால் நீ மட்டும்
முந்தைய
நாட்களை விட
அதி அழகாய் ...அன்பாய் ..
சொன்னதையே
சொல்லிக்கொண்டு ...
27 comments:
கவிதை..
கவிதை...
ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்
///பட படக்கும்
விழிகளோடு
சிறகடித்து வருகிறாய் ..///
நேர்ல பாக்குற மாதிரே கீதுப்பா
//உருப்புடாதது_அணிமா said...
கவிதை..
கவிதை...
ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்//
வாருங்கள் நண்பரே ...
சும்மா ஆஜர் மட்டுமே ...
ஆகட்டும் ..அப்படியே ....
நன்றிகளுடன் ....
//உருப்புடாதது_அணிமா said...
///பட படக்கும்
விழிகளோடு
சிறகடித்து வருகிறாய் ..///
நேர்ல பாக்குற மாதிரே கீதுப்பா//
அப்படியா நல்லது நண்பரே ...அடிக்கடி வாங்க ....
(நேர்ல பாத்தா மாதி கீத .. ப்பு )
intha kavithai poo ennai vasiyam seithuvitathu nanpare....
vazthukkal....
www.nallasudar.blogspot.com
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
intha kavithai poo ennai vasiyam seithuvitathu nanpare....
vazthukkal....
www.nallasudar.blogspot.com //
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ...அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...
கவிதை ரொம்ப நல்லாருக்குதுங்க :)
//சென்ஷி said...
கவிதை ரொம்ப நல்லாருக்குதுங்க :)//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ...அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...
\பட படக்கும்
விழிகளோடு
சிறகடித்து வருகிறாய் ..
நெருங்கி வர வர
எனை நோக்கி ...
மெல்லிய புன்னகை !!!...\\
மிகவும் ரசித்தேன் கவிதையை,
அதிலும் குறிப்பாக இவ்வரிகள் மிகவும் பிடித்திருந்தது!!
வாழ்த்துக்கள் விஷ்ணு!!
Ultimate Boss...
Bus -> athu mattumthaan englishla irunthathu.. so Perunthu nu pottirunthaa antha kuraiyum theenthirukkum :)))
Divya said...
\பட படக்கும்
விழிகளோடு
சிறகடித்து வருகிறாய் ..
// Divya said... நெருங்கி வர வர
எனை நோக்கி ...
மெல்லிய புன்னகை !!!...\\
மிகவும் ரசித்தேன் கவிதையை,
அதிலும் குறிப்பாக இவ்வரிகள் மிகவும் பிடித்திருந்தது!!
வாழ்த்துக்கள் விஷ்ணு!!//
பிடித்த வரிகளை எடுத்து சொல்லி வாழ்த்தியமைக்கு ..நன்றிகளுடன் ...
அடிக்கடி வர வேண்டுகிறேன் ..திவ்யா ...
// ஜி said...
Ultimate Boss...
Bus -> athu mattumthaan englishla irunthathu.. so Perunthu nu pottirunthaa antha kuraiyum theenthirukkum :)))//
முதல் வருகைக்கும் ...கருத்துக்கும் ..நன்றிகளுடன் ...
மாற்றி விடலாம் நண்பரே ...இப்போதே மாற்றி விடுகிறேனே....
சுட்டி காட்டியமைக்கு மீண்டும் நன்றிகளுடன் ..
அடிக்கடி வர வேண்டும் ..
என்றும்
இனிய தோழன் ..
Kavithai super-ah irukku anna..!! :))
// ஸ்ரீமதி said...
Kavithai super-ah irukku anna..!! :))//
ரெம்ப நன்றிகள் ஸ்ரீமதி ..
அடிக்கடி வர
வேண்டும்
அன்பு
அண்ணன் ...
நீண்டநாள் திட்டமிட்டு, இன்றுதான் உங்கள் வலைத்தளத்துக்கு வர வாய்ப்பு கிடைத்தது. ரசித்தேன். கவிதை ரசிகனான எனக்கு, உங்கள் படைப்புகள் மனநிறைவைத் தந்தன.
எனது வருகை தொடரும்.
வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன்
// GIRIJAMANAALAN said...
நீண்டநாள் திட்டமிட்டு, இன்றுதான் உங்கள் வலைத்தளத்துக்கு வர வாய்ப்பு கிடைத்தது. ரசித்தேன். கவிதை ரசிகனான எனக்கு, உங்கள் படைப்புகள் மனநிறைவைத் தந்தன.
எனது வருகை தொடரும்.
வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன் //
முதல் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் எனது உளம்கனிந்த நன்றிகள் ..திரு கிரிஜா மணாளன் அவர்களே ...
மனம் மிக மிக ஆனந்தத்தில் ..
உங்களைப்போன்ற
பெரிய எழுத்தாளர் எனது வலை தளம் வருகை தந்ததே
நான் செய்த பாக்கியமாய் கருதுகிறேன் ..
அதிலும் எனது கவிதைகள் பிடித்திருக்கிறது என்று சொன்னது ..
மிக பெரிய பரிசு கிடைத்த
திருப்தி மனதில் ..
எனது வருகை தொடரும் என்ற உங்கள் வரிகள்
எனக்கு நல்ல உற்சாகத்தை தருகிறது ..
மிக்க நன்றிகள் ... ஐயா ..
நான் சிறு வயது முதலே உங்கள் கதைகளில் காதல் காதல் கொண்டவன் ..
நிறைவே படித்திருக்கிறேன் ...
மீண்டும் நன்றி கலந்த வணக்கங்களுடன் ...
என்றும் உங்கள்
ரசிகனாய்
விஷ்ணு ..
///காலங்கள்
பல கடந்தும் ...
மனதில் தினம் சந்திக்கிறேன் ..
அதே காலை...
அதே நிறுத்தம் ...///
பல நினைவலைகளை மீட்டுப்போகிறது உங்களது வரிகள் விஷ்ணு
அன்புடன் ஜீவன்
இதுதான் எனது முதல் வருகை நண்பரே.. நுழைந்தவுடனே தள அமைப்பு மனதில் ஒட்டிக்கொண்டது.கவிதையைப் படித்தவுடன் 'புக் மார்க்கைத்' தேடியது எனது கர்ஸர்.
வரிகள் அனைத்திலும் கவித்துவம் மிளிர்கிறது.மழைநாளில் ஜன்னல் கம்பியில் முகம் தேய்த்த சில்லிப்பினைத் தந்தது தங்கள் கவிதை.
(வரிகளை காப்பி செய்ய முடியவில்லை. என்ன வழி...?)
//தங்கராசா ஜீவராஜ் said...
பல நினைவலைகளை மீட்டுப்போகிறது உங்களது வரிகள் விஷ்ணு
அன்புடன் ஜீவன்//
மிக்க நன்றிகள் ஜீவன் அவர்களே ...
சில நிகழ்வுகள்
என்றும் மனதில் மாயாமல்..
அவ்வப்போது
அசைபோட மனம்
ஆசைப்படுவது இயற்கையே ...
வருகைக்கும்
வாழ்த்துக்கும் ..
மனமார்ந்த நன்றிகளுடன்
அன்புடன்
விஷ்ணு
// தமிழ்ப்பறவை said...
இதுதான் எனது முதல் வருகை நண்பரே.. நுழைந்தவுடனே தள அமைப்பு மனதில் ஒட்டிக்கொண்டது.கவிதையைப் படித்தவுடன் 'புக் மார்க்கைத்' தேடியது எனது கர்ஸர்.
வரிகள் அனைத்திலும் கவித்துவம் மிளிர்கிறது.மழைநாளில் ஜன்னல் கம்பியில் முகம் தேய்த்த சில்லிப்பினைத் தந்தது தங்கள் கவிதை.
(வரிகளை காப்பி செய்ய முடியவில்லை. என்ன வழி...?)//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பரே ..
எனது கவிதையை தோற்கடித்து விட்டது உங்கள் வரிகள் ..அருமை ..
" மழைநாளில் ஜன்னல் கம்பியில் முகம் தேய்த்த சில்லிப்பினைத் தந்தது தங்கள் கவிதை "
அருமையான ..வர்ணனை ...நண்பரே மனம் மிக மகிழ்ச்சியில் ...
அடிக்கடி வர வேண்டுகிறேன் ...அன்புடன் ..
You can create a account in google reader and add my blog in your favorite blog list (like that way youn can copy this)...or just clik on the title of the post and clik on Tamilmanam tool bar to get that as a pdf file...
Thank you for visit
come again..
with love
Vishnu ..
//கவிதை..
கவிதை...
ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்//
வழி மொழிகிறேன், வழி மொழிகிறேன்.
கவிதை நல்லா இருக்குங்க.
மோகன்
// pathivu said...
//கவிதை..
கவிதை...
ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்//
வழி மொழிகிறேன், வழி மொழிகிறேன்.//
வாங்க மோகன் ..
முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ..
அடிக்கடி வந்து ஆஜர் போட வேண்டுகிறேன்
அன்புடன் ..
//pathivu said...
கவிதை நல்லா இருக்குங்க.
மோகன்//
மிக்க மகிழ்ச்சி மோகன் ..
நானும் உங்கள பார்க்க தான் வந்திட்டு இருக்கேன் ..
//கவிதை..
கவிதை...
ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்//
வழி மொழிகிறேன், வழி மொழிகிறேன்.
நானும் நானும்
அதிரை ஜமால் said...
//கவிதை..
கவிதை...
ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்//
வழி மொழிகிறேன், வழி மொழிகிறேன்.
நானும் நானும் //
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ..
அடிக்கடி வருகை தாருங்கள் ...
அன்புடன்
விஷ்ணு
MSS travels does not allow cancellation the tickets booked online on the journey date. Not sure whether this is as per the rule, but this should be avoided. People who sits in koyambedu booking office does not know how to talk to customers and simply don't want to hear that this is allowed in other bus services, rathimeena, kpn,etc., Does it mean that customers cannot take decision on the departure date to cancel the tickets? There are junk of stupid people who simply sit in the office to cheat the customers by saying some rules.
Post a Comment