அர்த்த
ஜாமத்தில்
அடிக்கடி வரும்
கனவொன்று
நேற்றும் ...
இருண்ட அறை ..
என்னால்
இயன்றது
இத்தனையே என
இருட்டை
விரட்டிக்கொண்டு
ஓரத்தில் சிறு விளக்கு ...
அவ்வப்போது
தேங்கல்களாய்
சில முனங்கல்கள் ..
மெல்ல பதட்டத்தோடு
நெருங்குகிறேன் ..
மூலையில்
முகம் புதைத்து
நெஞ்சில் உள்ளதை
சொல்லத்தெரியாமல்
அழும் சிறு குழந்தை ..
ஆறுதலாய்
அரவணைக்க
அன்பாய் தொட்டு
மூடி இருந்த
பிஞ்சு கைகளை ..
விலக்குகிறேன் ..
ஐயோ !!!...
என் முகம் ..
சிறு வயதில்
அறியாமல்
அனாதையாய்
நான் தொலைத்த
அன்றைய என்முகம் ...
13 comments:
அருமையான வரிகள் நண்பரே..
நாம் இன்றும் நம்முடைய பழைய முகத்தை தொலைத்து விட்டு தான் வாழ்கிறோம்..
புதிதாக முகமூடி போட்டு கொண்டு வாழ்கையை நடத்துகிறோம்..
நச் கவிதை...
தற்போது முகங்களை மறந்து,மனங்களை மறந்து பரிமாறிக்கொள்கிறோம் வெறும் முகவரி அட்டைகளை மட்டுமே....
நன்கு உள்ளது வாழ்த்துகள்!!!
//உருப்புடாதது_அணிமா said...
அருமையான வரிகள் நண்பரே..
நாம் இன்றும் நம்முடைய பழைய முகத்தை தொலைத்து விட்டு தான் வாழ்கிறோம்..
புதிதாக முகமூடி போட்டு கொண்டு வாழ்கையை நடத்துகிறோம்..//
உண்மை தான் நண்பரே ...உங்கள் கருத்துக்கள் ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ..நண்பரே ...
என்றும்
இனிய உங்கள்
தோழன் ..
// தமிழ்ப்பறவை said...
நச் கவிதை...
தற்போது முகங்களை மறந்து,மனங்களை மறந்து பரிமாறிக்கொள்கிறோம் வெறும் முகவரி அட்டைகளை மட்டுமே....//
உண்மை ..நண்பரே
இன்று எல்லாம் மாயமே ..
நிஜங்களை தொலைத்து விடுகிறோம் ..
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகளுடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு
// இனியவள் புனிதா said...
நன்கு உள்ளது வாழ்த்துகள்!!!//
மிக்க நன்றிகள்
இனியவள் புனிதா அவர்களே ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
அண்ணா அருமையான கவிதை..!! :))
//ஸ்ரீமதி said...
அண்ணா அருமையான கவிதை..!! :))//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தங்கையே ..
அன்பு
அண்ணா
நன்றாக உள்ளதுங்க விஷ்ணு..
என் பால்யத்தை ஒருகணம் நினைக்கவைக்கிறது இக்கவிதை..
//Gokulan said...
நன்றாக உள்ளதுங்க விஷ்ணு..
என் பால்யத்தை ஒருகணம் நினைக்கவைக்கிறது இக்கவிதை..//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் நண்பா ..
அடிக்கடி வருகை தர அன்புடன் வேண்டுகிறேன் ..
என்றும் இனிய தோழனாக ...
விஷ்ணு
விஷ்ணு,விடுபட்ட அத்தனை கவிதைகளையும் வாசித்தேன்.
கவிதையின் கருவைத் தேடித் தேடிப் பலமுறை வாசித்தேன்.அத்தனையும் முத்துக்கள்.
//ஹேமா said...
விஷ்ணு,விடுபட்ட அத்தனை கவிதைகளையும் வாசித்தேன்.
கவிதையின் கருவைத் தேடித் தேடிப் பலமுறை வாசித்தேன்.அத்தனையும் முத்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி ஹேமா..எனக்கு நீங்கள் தரும் உற்சாகம் மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது ...
வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகளுடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
"என்னால் இயன்றது இத்தனையே என இருட்டை விரட்டிக்கொண்டு ஓரத்தில் சிறு விளக்கு..."
அப்பப்பா மிகவும் ரசித்தேன்...
Post a Comment