பதில்கள்
பல இருந்தும் ..
மொழிகளின்றி
ஊனமாகிவிட்ட
கேள்விகள் ...
பல இருந்தும் ..
மொழிகளின்றி
ஊனமாகிவிட்ட
கேள்விகள் ...
மீட்ட துடித்த
விரல்களையே
காயமாக்கிவிட்டு
கண்ணீர்விடும்
வீணை நரம்புகள் ..
இதயத்தில் தங்கி
வெளிவரா
ஆசைகளின் ..
அன்றாட அவலங்கள் ...
தோல்வி என
தெரியாமல்
தொடர்ந்து
தீக்கிரையாகும் ..
விட்டில் பூச்சியின்
விளக்கு காதலாய் ...
இந்த ஜென்மமும் ..
நகர்கின்ற
பரிதாப நாட்களும் ...
6 comments:
தோல்வியை கண்டு துவண்டு விடாதே நண்பா!!!
என்றும் அன்புடன் நந்தா
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் தோழியே ....
என்றும்,
இனிய தோழன்
விஷ்ணு ...
சோகமான கவிதை........மனம் தளர வேண்டாம் விஷ்னு,சியர் அப் ப்ளீஸ்:))
ஆதரவுக்கு ..
அன்பான வணக்கங்கள் ..
திவ்யா அவர்களே ...
இனிய தோழன்
விஷ்ணு
உங்கள் கவிதைகள் வார்ப்பு இணையத்தளத்தில் பார்த்திருக்கிரேன்
நன்றாக எழுதுகிறீர்கள்
//saki said...
உங்கள் கவிதைகள் வார்ப்பு இணையத்தளத்தில் பார்த்திருக்கிரேன்
நன்றாக எழுதுகிறீர்கள்//
அப்படியா ..நல்லது சகி அவர்களே ...
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் ...மிக்க நன்றிகள்... அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ..
Post a Comment