Wednesday, January 16, 2008

பைத்தியமாய் ...





என் கனவு....

என் இரவுகளை
நீ சிறை பிடித்ததால்
என் கனவுகள்
களவாடப்பட்டு விட்டன !!!...
விடுதலைக்கு
இன்றும் என்விழிகள்
சாட்சி கூண்டில் ...

என் ஆசைகள் ...

அழகாய் இருக்கிறதடி
உன் வாசல் கோலங்கள்...
புள்ளிகளாய் நீயும்
என் ஆசைகளை
வைப்பதாலோ !!!...
நசுங்கித்தான் போனதடி
அதுவும்
உன் வீட்டு நாய்குட்டி
முதல் பால்காரன் வரை
பாதங்கள் பட்டு !!!..

என் நினைவுகள் ....

மறந்துவிடு
எனச்சொல்லி
நீ எறிந்த கல்லில்
உடைந்து விட்டது ...
கண்ணாடியாய் !!!...
ஓராயிரம்
உன் பிம்பங்கள்
உடைந்த துண்டுகளில்
உட்கார்ந்து கொண்டு
இன்றும்
கீறுகின்றன...
என் இதயத்தை !!!...

என் சிரிப்பு ...

அதை எடுத்து நீயும்
வீதியில் எறிந்ததால்
எனை பார்த்தாலே
அள்ளி தருகிறார்கள்
அனைவரும் எனக்கு...
என்ன செய்ய ...
நானும் தெரிகிறேனே
பைத்தியமாய் !!!...
அவர்களுக்கும் ...

10 comments:

இனியவள் said...

புள்ளிகளாய் உன் ஆசைகளை
கோலத்தில் சேர்த்தவள்,
அவள் யாரே?

அது செரி ,
அந்த வீட்டு நாய்க்குட்டி யார் ??
இவன் ஆசைகளை பாதங்களாள் மிதுப்பது...

அழகு வாழ்த்துக்கள்

Vishnu... said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் ...
இனியவள் அவர்களே ...
இதயத்தின் பாதிப்புகள்
சில நேரம் கவிதை ஆகும் ...
ஆசைகளை நசுக்க
உரிமைகள் யார் கொடுப்பது ...

Vishnu... said...
This comment has been removed by the author.
Anonymous said...

எளிய சொல்கொண்டு வார்த்த இனிய கவிதை.
வாசிக்க வாசிக்க மேன் மேலும் வாசிக்கத் தூண்டுகின்றது.

வாழ்த்துக்கள் நண்பரே...

Vishnu... said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை அரசன் அவர்களே ..உங்களை போன்ற படைப்பாளியின் கையில் பாராட்டு பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ..உங்கள் கவிதைகளின் தேன் இனிமை நானும் நிறையவே ருசித்திருக்கிறேன் ..அவ்வப்போது வருகை தந்து எனக்கு வழிகாட்ட வேண்டுகிறேன் ...

காயத்ரி said...

ஆசைப்புள்ளிகளின் கோலம் நசுக்கப்பட்டாலும்
உங்களின் ஆசைகள் அரங்கேற்றப்பட்டுவிட்டதினால் சந்தோஷிக்கிறேன் நான் உங்கள் அன்பு தோழியாய்!

என்றும் நட்புடன்
கவிநா...

Vishnu... said...

உனது
வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றிகள்
என் இனிய தோழியே ,...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ..

thamizhparavai said...

பாராட்டுவதற்காக வரிகளைக் கூடையில் நிரப்பினேன்.கூடையைத் தூக்க முயல்கையில் கனத்தது. பார்த்தால் கூடைக்குள் கை கொட்டிச் சிரித்தது மொத்தக்கவிதையும்.மென்மலர்(வரி)களுக்குள் வலியான உள்ளத்தின் கண்ணீர்...
மிக அருமை நண்பரே... வாழ்த்துக்கள்...

thamizhparavai said...

just for mail followup

Vishnu... said...

// தமிழ்ப்பறவை said...
பாராட்டுவதற்காக வரிகளைக் கூடையில் நிரப்பினேன்.கூடையைத் தூக்க முயல்கையில் கனத்தது. பார்த்தால் கூடைக்குள் கை கொட்டிச் சிரித்தது மொத்தக்கவிதையும்.மென்மலர்(வரி)களுக்குள் வலியான உள்ளத்தின் கண்ணீர்...
மிக அருமை நண்பரே... வாழ்த்துக்கள்...//



மிக்க நன்றிகள் நண்பரே ..
இவ்வளவு அழகாக
எனக்கு பாராட்டா ..
நம்ப முடியவில்லை ...
ஆனால் ஒரு மட்டும் உறுதி உங்களுக்கு நல்ல
கற்பனை வளம் இருக்கிறது ..
எவ்வளவு இனிமையாக
சொல்லி விட்டீர்கள் ...

உண்மையில்
நீங்கள் அருமையாக
கவிதைகள் படைக்கலாம்

அந்த திறமை உங்களுக்கு இருக்கிறது ..
முயற்சி செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ..

அடிக்கடி
வரவேண்டும் என
வேண்டும்
உங்கள் தோழன்
விஷ்ணு