Monday, January 14, 2008

இனிய நட்பு ,...





என் இனிய தோழியே ...
நினைவிருக்கிறதா உனக்கு...
நமது அறிமுக நாட்கள் ...
ஆனந்தமாய் ..ஆர்பாடமாய்...

நானும் ஆமை வேகத்தில்
நீயோ அதிவேக புகைவண்டியாய்..
நல்ல நண்பர்களாய் நாமும்
நெகிழாத நாளும் உண்டோ

தொலைவில் இருக்கும் உனை
தொடர்ந்து வந்திடவே
தொலைபேசி உதவி அது
தொடர்கதையாய் தொடர்கிறதே

இன்பங்களை மட்டுமே
என்னவள்க்கு சொந்தமாக்கி
துன்பமது வரும்போது நெஞ்சம்
துணையாக உனை தேடும்

கனமான கவலைகளில் நானும்
கால் இடறி வீழ்வதில்லை
தோள் கொடுக்க நீயும் வந்து
தோழியாக நிற்பதனால் ...

இறந்த கால ஏமாற்றங்கள்
எத்தனையோ எந்தன் உள்ளில் ...
துவண்டு போன மனதோடே
இருளாக இருந்த எனை ..

விளக்குடனே நீயும் வந்து
வெளிச்சமாக பாதை தந்தாய்..
தோழி நீயும் கிடைததிலே ..
தலைகனமே எனக்கும் கொஞ்சம் ...

இதயத்தின் தோட்டத்தில்
நட்புதனை பயிர் செய்வோம் ...
காவல் காப்போம் காத்திருந்து
காலமெலாம் அது பூக்கட்டுமே ...

5 comments:

இனியவள் said...

உன் தோழிக்காக வடித்த கவிதை அருமை...

உங்கள் நட்பு என்றும் தொடர என் வாழ்த்துக்கள்

Vishnu... said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் ... இனியவள் அவர்களே ...
என்றும் தொடரும் இனிய நட்பு தான் அது ...

காயத்ரி said...

நீங்கள் கவித்த கவிதை தோழியாய் நானும் இருக்க
விரும்புகிறேன்...

என்றும் நட்புடன்,
கவிநா....

Vishnu... said...

கவிநா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ..நீங்கள் என்றுமே எனது கவித்தோழி தானே ..

அன்புடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு,..

nalanyjadwin said...

Harrah's Resort Atlantic City - JtmHub
JIMH'S RESORT CASINO in Atlantic City offers 5-Star 나주 출장샵 accommodation. Guests can enjoy a swim in 경주 출장안마 the 용인 출장마사지 outdoor 상주 출장안마 pool at 충주 출장안마 JIMH'S, the non-smoking