Wednesday, March 1, 2017

என்னவனே ...


என்னவனே ...
அழுவதற்கும் ஆசையடா
தலை சாய்த்து உன் மடியில் !!!....
தடுக்கி விழ ஆசையடா
தாங்கி கொள்ள நீ இருந்தால் !!!...

தோற்பதற்கும் ஆசையடா
ஆறுதலாய் உன் தோளிருந்தால் !!!..
கோபப்பட ஆசையடா...
குளிர்விக்க நீ இருந்தால்.....

வெட்கம் விட ஆசையடா
வெளிச்சமாக உந்தன் முன்னில் !!!....
பட்டினியில் ஆசையடா
பசி மாற்ற நீ இருந்தால் !!!....

இமை மூட ஆசையடா
கண் மணியாக நீ இருந்தால் !!!..
நினைவிழக்க ஆசையடா
உணர்விக்க நீ இருந்தால் !!!...

விபரீத ஆசைகளே
விரகமாகி போனதடா !!!...
அணை போட வாராயோ
அனுதினமும் மரணமடா !!!...

Saturday, August 4, 2012

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்





முகம்
தெரிந்து வரும் காதல் ...
முகமே
தெரியாமல் வரும் நட்பு ...

உணர்ந்தது போல்

உருவாகி
பிரியலாம் காதல் ...

உணராமலே
உருவாகி
உயிராகுமே நட்பு ... !
- விஷ்ணு 
 
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே !

Thursday, July 26, 2012

ஊமை ...

ஊமை ...
********

நட்புக்குள்
நஞ்சாகும் பொய்கள் ...
காதலுக்குள் சிறகடிக்கும்
சந்தேகப்பறவைகள்
தவிர்க்கப்பட்டதன் காரணம்
தெரியாமல்
அலைபாயும் தவிப்புகள் ...
புதிய ஞானத்தை
கோலமிட்டு செல்கின்றன
என் வாசலில் ...
ஊமையான
புல்லாங்குழலாகிறேன் ...
ஊனமான மனதோடு
- விஷ்ணு

Sunday, June 3, 2012

உன் நினைவுகள் ...



எனது தனிமையை கூட
என்னிடமிருந்து
பிரித்து விட்டது
உன் நினைவுகள் ...

மணித்துளிகள்
மௌனங்களில் கரைய
என்னை சுற்றி
ஓராயிரம் மின்மினிகளாய்
வெளிச்சத்தை விதறி  போகும்
நீயும்
உன் நினைவுகளும் ..

                  - விஷ்ணு

Wednesday, March 14, 2012

அபயம் தேடி...


புகையூட்டப்பட்ட
இருட்டறையில் தப்பி  வர
துடித்தபடி மனது ..

துயரத்தோடு  கனவுகளும்
வெறுப்பின் துணையோடு
அபயம்  தேடி  அலைபாய

கடந்த கால
கதைகளிலெல்லாம்  மூடல் பனியாய்
சோகப்படலம் சுற்றி வர ..

புலம்பல் திரி கொளுத்தப்பட்டு 
பிரபஞ்சமெங்கும்  மானுடத்தின் அவலம்
பேரிடியாய் அதிர்ந்து  ஒலிக்கிறதே ..

                                                         விஷ்ணு ...