Friday, December 7, 2007

மறந்தாலும் ,...


இமைகளை
மூடினால் உன் பிம்பம் !!!,...
இதழ்களோ ,...
உன் பெயரை மட்டுமே
உச்சரிப்பேன் என்கிறது !!!,...

உன்
கவிதைக்களுக்கு மட்டுமே
என் காதுகள்
கவனம் கொடுக்கின்றன ,....

காணாமல் போகிறதே
இவ்வுலகம்
கண்முன்னில்
" கண்ணா " என்ற உன்
காந்த அழைப்பில்,..

ஏன் இத்தனை !!!....
என் சுவாசத்தை
கொஞ்சம்
வாசித்து பாரட,..
வாசமாய் வீசும்
உந்தன் நினைவே
எந்தன் மூச்சாய்,..

உளம் துடிக்க
மறந்தாலும் ,...
உயிர் எரியும்
ஜோதியாய் !!!... என்றும்
உனை பிரகாசிக்க
தீபமாய் !!!,...

Tuesday, November 27, 2007

ஆயுள் கைதி,....




உனக்காக
காத்திருக்கையில்.....

நகராத நாட்கள்....
நீங்காத நேரங்கள்...
குறையாத மணித்துளிகள்....
அத்தனையும்
சொல்கிறது பெண்ணே !!!...
"கவிதையான நிலவுக்கு"
காத்திருக்க வேண்டுமாம் ...

கண்டதும் காதல் ...
இல்லை !!!.. இல்லை !!!....
காணமலும் காதல் வரும் ...
ஆதாரம் கேட்கிறார்களா ?..
அனுப்பிவை என்னிடம்....

சிணுங்கல்களால் எனை
சிறை பிடித்தவளே,....
விடுதலையே வேண்டாம்..
அடைத்துவிடு மனக்கூட்டில் ....
"ஆயுள் கைதியாய் "
தீர்ப்பும் சொல்லி !!!....

Monday, November 19, 2007

என்னவனே ...



என்னவனே ...

அழுவதற்கும் ஆசையடா
தலை சாய்த்து உன் மடியில் !!!....
தடுக்கி விழ ஆசையடா
தாங்கி கொள்ள நீ இருந்தால் !!!...

தோற்பதற்கும் ஆசையடா
ஆறுதலாய் உன் தோளிருந்தால் !!!..
கோபப்பட ஆசையடா...
குளிர்விக்க நீ இருந்தால்.....

வெட்கம் விட ஆசையடா
வெளிச்சமாக உந்தன் முன்னில் !!!....
பட்டினியில் ஆசையடா
பசி மாற்ற நீ இருந்தால் !!!....

இமை மூட ஆசையடா
கண் மணியாக நீ இருந்தால் !!!..
நினைவிழக்க ஆசையடா
உணர்விக்க நீ இருந்தால் !!!...

விபரீத ஆசைகளே
விரகமாகி போனதடா !!!...
அணை போட வாராயோ
அனுதினமும் மரணமடா !!!...

Monday, November 12, 2007

அந்த நாள் வரை ,...



மார்கழி பனியில்
அதிகாலை பூக்கள் ,...
சித்திரையில்
பௌர்ணமி நிலவு...
மரத்தில் மாங்கனியோடு
அணீலின் கொஞ்சல் ...

கூட்டமாக பறக்கும்
தேசாடன பறவைகள்...
கரையோடு காதல்தீரா
அலையோசை...
வான்மகளின்
முகம் சிவந்த வெட்கம்,...

சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,.... என
அத்தனை அழகையும்....
அபகரித்த உனைக்கண்ட...
அந்த நாள் வரை ,...

காதலித்திருந்தேன் !!!...
அன்பே !!!...
உனைவிட்டு அவைகளை !!!...

Sunday, November 11, 2007

என் காதல்,...


என்னவளே !!!...
உன் இதயத்தை
நானும்
தடவிக்கொண்டும்...
வருடிக்கொண்டும்...
புரியமாட்டேன்
என்கிறது பெண்ணே !!!
குருடனுக்கு கிடைத்த
மோனோலிஸா ஓவியமாய்...!!!!....

தேடி தேடி கால்கள்
தேய்ந்தது தான் மிச்சம் !!!...
அகராதியே கிடைக்கவில்லை
உன் மௌனத்தின்
அர்த்தம் பார்க்க...!!!...

ஊமை கண்ட
கனவாய்...என் காதல்
ஊனமாகி போனதடி !!!...
ஊர் அறிய ஆசை இல்லை !!!...
ஊன்றுகோலாய்....
நீ உணர்ந்தால் போதுமடி..!!!